அரசியல் புதிர் – Political Conundrum

August 12, 2016

எழுத்தாளர், ஆசிரியை மற்றும் தொகுப்பாளர்,

பத்மினி அர்ஹந்த்

வணக்கம்.

தமிழர்கள் உட்பட உலகத்தின் குடி மக்கள் எல்லோருக்கும் சில விஷயங்கள் பற்றி என் கருத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன். தற்கால உலக சூழ்நிலை சாதாரண மக்களுக்கு அதிக வாய்ப்பு இல்லாத பட்சத்தில் வறுமையும் நிறைய துன்பங்களையும் அவர்கள் சகித்து கொண்டிருக்கின்றனர். இதே மாதிரி மத்திய வருமான உறுப்பினரும் அவதிப் படுகின்றனர். அரசு மக்களின் பிரச்சனைகளை முழுமையாக தீர்க்காவிட்டாலும் அதை குறைப்பதற்கு வழியை தேடலாம். ஆனால் அதற்கு அக்கறையும் ஆலோசனையும் தேவை. இது இரண்டும் காணவில்லை. காரணம் – அரசாட்சியில் தலைமை புரிபவர்கள் இதை முக்கியமாகக் கருதுவதில்லை.

உதாரணமாக – பாரதத்தின் தமிழ் நாட்டில் மக்கள் அவதி பெரிதாகினும் முதல் அமைச்சர் தன் கட்சியின் விவகாரங்களை கண்காணிக்கவும் கட்சியிலுள்ள அதிபர்களை விளக்கவும் தண்டிக்கவும் நேரம் சரியாகிறது. இந்த சம்பவங்கள் கட்சியின் அலுவலகத்தில் வைத்து கொண்டாலும் ஒரு பக்கத்தில் இது அரசியல்வாதிகளின் குடும்ப பிரச்சினை என்று போய் விடும். ஆனால் இதை பிரசங்கம் செய்து நாடாளும் மன்றத்தில் நாடகம் நடப்பதில் மும்மரமாகியுள்ளார்.

திரை உலகத்திருந்து அரசியலுக்கு வந்ததினாலோ படம் காட்டும் பழக்கம் முத்திப்போனதில் ஆச்சரியமில்லை. மாநிலத்தின் நிலமையோ அல்லது பொது மக்களின் வேண்டிய வசதிகளைக் கவனிப்பதற்கு இவர்கள் கையில் ரொக்கத்தை திணித்தால்தான் எதுவும் நடக்கும். இவர்களுக்கு மீண்டும் மீண்டும் வோட்டை போட்டு சிம்மாசனத்தில் அமர்த்தி வைக்கும் பாமர மக்களும் நகரத்தில் வசிக்கும் செல்வந்தர்களும் அவர்களுடைய சுயநலன் நீடிக்க இந்த மாதிரி ஊழலில் மூழ்கிய பேர்வழிகளை ஆண்டாண்டு காலம் பதவியில் உட்கார அனுமதிப்பதால் மற்றவர்களுக்கு மிகுந்த அல்லல் அவஸ்தை உருவாகியுள்ளது.

இந்த கட்சியைத் தவறினால் எதிர்க் கட்சி இவர்களின் இராட்டை சகோதரர்.

இந்த நிலமை தமிழ் நாடு மற்றபடி எங்குமே தர்ம சங்கடமாகியுள்ளது. திரை உலகம், செய்தி, பத்திரிக்கை, வானொலி, டெலிவிஷன் யாவும் இவர்களின் கைவசம். இவர்களை புகழ்வதும், வாழ்த்துவதும் ஆக மொத்தம் இவர்களின் கவசமாகியுள்ளார்கள்.

உண்மையை மறைத்து பொய்யை மெய்யாக்குவது சூடான சாம்பார் சாதத்தில் நெய் விட்டது போல் ஆகி விடுகிறது. இவர்களுக்கு இது சர்வ சாதாரணம். செய்தி நிலையங்கள், திரைப்படம் ஆகியவைகள் மக்களின் குரலை நிராகரித்து அரசியலின் யந்திரமாக இருப்பினும், உண்மையை பேரம் பேசி விலைக்கு வாங்கி விடுகின்றனர்.

விலை வாசி புயல் போல் படர்ந்து வானத்தைத் தொட்டாலும், அது மக்கள் விதியாகிவிடுகிறது.

தமிழ் நாடு திரை உலகம் மற்ற நாட்டில் தமிழர்களின் கீழான ஸ்தானத்தையும், குறைகள், வேறுபாடு என்ற பல விதமான கஷ்டங்களை இந்தியாவிற்கும் உலகத்திற்கும் உணரவைப்பது பெருமையாக இருந்தாலும், தமிழ் நாட்டில் வாழும் குடி மக்கள் குடி நீர் இல்லாமல், வசிக்க இடமில்லாமல், மாணவர்கள் படித்து பட்டதாரி ஆகியும் வேலைக் கிடைப்பது குதிரை கொம்பாக இருப்பதை செய்தி, பத்திரிக்கை, டெலிவிஷன், திரைப்படம் என்ற பிரபல மையங்கள் மூலம் அரசியல் நிபுணர்கள், அறிஞர், மற்றும் கலைஞர் ஆகியோர்க்கு எடுத்து உரைத்தால் அது நிலவரத்தைக் கொஞ்சம் சீர் திருத்தலாம். ஆனால் இது நடக்கிற விஷயமில்லை.

நான் மேல் பகுதியில் கூறியது போல், தொடர்பு ஊடகங்கள் (Communication Media) ஊழல்வாதிகளுக்குச் சங்கு ஊதுவது அவர்களுக்கு சாதகமாகியுள்ளது. தமிழ் நாட்டில் சமீபத்தில் மூலைக்கு மூலை குடி நீருக்குப் பதில் மதுக் கடைகள் டாஸ்மாக் என்ற முறையில் குடியை கெடுக்கும் குடி பழக்கத்தைப் பரவிய அரசியல் கட்சிக்கு மக்களின் எதிர்ப்பு எந்த மாறுதலையும் தரவில்லை. அதற்கு ஏறு மாறாக மீண்டும் அந்தக் கட்சியும் அதன் தலைவியையும் திரும்ப ஆட்சிக்குக் கொண்டு வந்தது குடி அரசின் மிக பெரியத் தோல்வியாகும்.

மற்ற கட்சிகளும் இந்த வகையில் ஒன்றுதான். இந்த சீர் குழைந்த சிக்கல்களை நான் எடுத்துக் கூறினால், அவர்கள் தன்னிடமிருக்கும் பிரச்சார ஆயுதம் அதாவது மீடியா வழியாக தாக்குவதில் திறமை வாய்ந்துள்ளார்கள். தன்னைக் காப்பாற்றவும், தன் பதவியைப் பாதுகாப்பதும்தான் அவசியமாகியுள்ளது.

இது தமிழ் நாடு மற்றுமில்லை, இந்தியாவிலும், உலக பகுதிகளில் நடந்து வரும் அரசியல் வழக்கமாகி விட்டது. ஆனால் தமிழ் நாடு அரசியல் தரம் கெட்டு, மதி இழந்து குடி மக்களை குடி பழக்கத்தில் திசை மாற்றியது மனித குலத்திற்குத் தீங்கும் இழப்பையும் ஏற்றியுள்ளது. இதையெல்லாம் விட இவர்களை தட்டிக் கேட்பதில்லாமல், இவர்களுக்கு பூமாலை சூடி இவர்கள் படத்திற்கு முன்னாள் திருஷ்டிக் கழிப்பது மனித மூடத்தனம், பலஹீனம் தெளிவாகிறது.

கண் விழித்திருந்தும் பாதைத் தவறினால், அது மூலை உபயோகத்தில் குறையாகும்.

இத்துடன் இந்த சங்கதி முடிகிறது.

என்னிடமிருந்து மக்கள் சமுதாயம் சம்பந்த சர்ச்சை உங்கள் முன்னாள் விரைவில் காணலாம்.

மீண்டும் தொடர்பு கூடிய சிக்கிரமாகும்.

எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி.

இப்படிக்கு,

பத்மினி அர்ஹந்த்

 

Comments

Got something to say?

You must be logged in to post a comment.