இந்தியா – தமிழ் நாடு அரசியல்

May 25, 2015

எழுத்தாளர் – பத்மினி அஹந்த்

தமிழ் நாட்டின் அரசியலை திரை படமாகக் கருதி குடி மக்களை ஏமாற்றுவது கடுமையான தண்டனைக்கு ஆளாகிறது. அரசியலை ஒரு நாடகம் போல் நடத்தி திரை பட நடிகையை நடிக்க வைப்பது பெருமையான காரியம் அல்ல.

இந்த தெருக் கூத்து ஜன நாயக ஸ்தானத்தை அழிப்பதுமில்லாமல் மக்களின் அறிவை ஏளனம் செய்வதாகும்.

ஊழல் மற்றும் கொலை, கொள்ளை, கள்ள நோட்டு பதித்து கள்ள வோட்டு மூலம் பதவிக்கு வந்து அதிகாரத்தை தவறாக பயன் படுத்தி மாநிலத்தை சுய ராஜியமாக்கி தன்னுடைய அஹங்காரத்தை தெரிய படுத்தும் குற்றவாளிகளை முதல் அமைச்சராக அமர்த்துவது சீரழிவாகும்.

தமிழ் நாடு முன்னேற்றமாவதற்கு வழி – பல ஆண்டு காலம் மற்றும் தற்சமயம் ஆட்சி புரிந்து வரும் அரசியல் கட்சிகள், கட்சியின் அதிபதி, சகல உருபினருடன் நிராகரித்து, அதற்கு பதில் மக்கள் அவரவர் தொகுதியில் நேர்மை, நீதி, ஒழுக்கம், அறிவு, திறமை, அனுபவம் மற்றும் கண்ணியமான நபர்களை தேர்ந்தெடுப்பது அவசியமாகும்.  பிறகு மக்கள் குறிப்பிட்டவர்கள் ஒன்று சேர்ந்து கட்சியை உருவாக்கி தேர்தல் சீர்திருத்தம் நிறை வேற்ற வேண்டும்.

இந்த விஷயத்தில் மக்கள் கவனம் தேவை. தமிழ் நாடு மற்றும் பாரதம் முழுதும் அரசியல் கட்சிகள் அந்நியர்களின் பிரதிநிதி. இவர்கள் மாநிலத்திற்கும் தேசத்திற்கும் துரோகம் செய்வதில் சிறிதும் தயங்குவதில்லை.  இப்படி இருக்கையில், மக்கள் நலனிற்காக இங்கு வழங்கப்படும் எந்த யோசனையையும் தன் சுயநலத்திற்காக உபயோகிக்க பல பேர் வருவதில் சந்தேகமில்லை. அதனால் மக்களின் பகுத்தறிதல் மிகவும் வேண்டியது.

அரசியல் வாதிகளுக்கு தேர்தல் ஒரு நுழைவு தன்னுடைய சர்வாதிகாரத்தை மக்கள் மீது சுமத்துவதும், பதவியில் இருக்கும் பொழுது மாநிலத்தின் வருமானத்தையும், மக்களின் வரிகளையும் சூறையாடும் சந்தர்ப்பத்தை இவர்கள் வீண் போக விடுவதில்லை.

மற்றபடி நீதி வழக்கையும் கூட மிரட்டல், லஞ்சம் மூலம் தனக்கு சாதகமாக திருப்பி மீண்டும் பதவிக்கு வருவது வழக்கம் ஆயினும், இப்படிப்பட்ட அரசாங்கம் பதவி, புகழ், பொருள் பேராசையின் அடிமையாக இருக்கையில், எந்த நடவடிக்கையும் தனக்கு சாதகமாக இருப்பதை தான் கடை பிடிக்கிறார்கள். இவர்களின் ஒவ்வொரு செயலிலும் தன்னுடைய ஆட்சியை நீடிக்கும் ஆர்வத்தைக் காணலாம்.

தானம், தருமம் நடப்பது மக்களின் சொத்தை உபயோகித்து அதையும் வோட்டாக மாற்றி அரசாளும் வெறியை பார்க்க முடிகிறது.

உண்மையாக தேசம் அல்லது மாநிலம் மேல் பற்று உள்ளவர்கள் முதலாவது – ஊழல், சட்டத்தை பேரம் பேசி வாங்குவது, தன்னை உத்தமியாக வேடம் போட்டு மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டார்கள். இரண்டாவது – தான் அரசியலில் சேர்ந்த நாள் முதல் இந்நாள் வரை கொள்ளையடித்த மக்களின் பணத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைத்து, பதவி மோகத்தை துறந்து தன்னுடைய சொந்த செல்வத்தை மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்திற்க்காகக் கொடுப்பார்கள். மூன்றாவது தெய்வங்களையும் உபயோகிக்க இவர்கள் சலைப்பதில்லை.

இந்த தரம் கெட்டவர்கள் மத்திய கிழக்கு அதாவது மிடில் ஈஸ்ட் நாடுகளில் உள்ள கொடூர ஆட்சியின் பண்பாட்டை தமிழ் நாட்டில் அமலாக்குகிறார்கள். மக்களை அடக்கி ஒடுக்கி போலீஸ் என்கௌன்ட்டர் இல்லாவிட்டால் பெண்களையும் குடும்பத்தையும் துன்புறுத்தும் முறைகளை பின்பற்றுகிறார்கள்.

பிரஸ், பத்திரிக்கை பற்றா குறைக்கு தனது டெலிவிஷன் செந்நெல் வழியாக வதந்தியும், தன்னை புகழ்ந்து பொய்யான நிகழ்ச்சிகளை காண்பித்து மக்கள் சிந்திக்க முடியாதபடி மூலையையும் தாக்குகிறார்கள்.

இதன் காரணம் சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு நபர்கள், தொழில் அதிபர்கள், மற்றும் அரசியல்வாதிகளை மக்கள் அளவிற்கு மீறி மரியாதையும் சேவையும் செய்து அவர்களை மனிதர்கள் இன்றி தெய்வாமாக்கி இறைவனை அவமதிப்பதால் இந்த நிலமை உருவாகியுள்ளது.

அவர்கள் தன்னையே பூமியின் கடவுளாக நினைப்பது மக்கள் கொடுத்த சலுகையும் அனாவசிய ஆதரவின் விளைவாகும்.  இதோடு அரசியலில் கட்சியின் தலைவர், தலைவிக்கு குடை பிடிக்கவும், செருப்பு துடைப்பவறும்தான் கட்சியில் சேர்க்க படுவதினால், கட்சிக்காரர்கள் கட்சியின் தலைமை புரிபவர்களுக்கு ஏகப்பட்ட பட்டங்கலும், விருதுகலும் கொடுத்து தரை மட்டத்தில் இருப்பவர்களை வானத்தில் வைக்கிறார்கள்.

இந்த பிரச்சனைகளுக்கு பரிகாரம் – மேல் பகுதியில் அறிவித்தப்படி எல்லா கட்சிகளையும் விலக்கி, தன் சுக போகங்களை கருதாமல் மக்களுக்கு பனிவிடை செய்வதே லட்சியமாக உள்ளவர்களையும், நல்ல நோக்கம், நாணயம் அதோடு தூரத்து கருத்து அறிந்தவர்களை கொண்டு வருவது நன்மையாகும். முக்கியமாக உள் நாடில்லும் சரி அந்நியர்களுடன் கூட்டு சேர்ந்து சதி செய்யும் நரிகளை தள்ளி வைப்பது எல்லா வகையில் மேலாகும்.

அரசியலின் மூன்று கிளை அலுவலகம் பதவிகள் நிரந்தரமாக நீடிக்காமல், கால எல்லை ( டெர்ம் லிமிட்) அறிமுகப்படுத்துவது முன்னுரிமை. இல்லையென்றால் தன் இஷ்டப்படி நான்காவது, ஐந்தாவது தடவை முதல் அமைச்சராக அமர்ந்து கொண்டு என்றைக்கும் தீராத பதவி பித்து பிடித்தவர்கள் மக்களின் ஏழ்மை, துயரம் மற்றும் கல்வியறிவின்மையை தேர்தலில் வெற்றிக்காக மறுபடியும் உபயோகிப்பது ஐதிகமாகி விட்டது.

தேர்தல் திருப்பம் ஆகும் வரையில், தேர்தலில் பங்கு கொள்ளாமல் இருக்கிற எல்லா கட்சிகளையும் அடியோடு புறக்கணிப்பது மக்களின் அருமையையும் சக்தியையும் தெளிவு படுத்தும்.

பதவிக்காக மோசடி செய்வது அரசியலின் தனிச்சுதந்திரமாகி, அநியாயம் அட்டகாசம் பெருகிக்கொண்டே இருக்கிறது. சட்டம் என்பது பொது மக்களுக்கு மற்றும் நியமிக்கப்பட்டதால் குற்றம் செய்பவர்கள் அரசியல் மற்றபடி பெயர் வாய்ந்தவர்கள் கூட்டணியை பாதிப்பதில்லை. இதற்காகவே ஊழல் தடுப்பு பிரச்சாரம் இவர்களுக்கு சம்மதமில்லை.

எல்லா விதத்தில்லும் இப்பொழுது நடக்கிற சம்பவங்கள் குடி அரசின் பெயரில் மக்களின் குடியை கெடுக்கும் ஆட்சிகள் துணிச்சல் பெறுவது புது தில்லி அரசியல் மற்றும் அந்நியர்கள் சாம்ராஜ்யம் தூண்டிய கை வரிசையாகும்.

இதற்க்கு முற்றுபுள்ளி வைப்பதில் தான் மக்கள், நாடு தேற முடியும். இல்லாவகையில் ஆணவம், அகம்பாவத்தோடு ஊழல் அஸ்திவாரமாக கொண்ட அரசாங்கம் நீடிப்பது மக்கள் வேதனையும், நாட்டிற்கு சேதமும் தான் அதிகரிக்கும்.

பிறருக்கு அக்கறை இல்லாவிட்டாலும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஒத்துழைப்பில் அந்தந்த ஜில்லா, மாவட்டம் பொது சந்திப்பு ஏற்பாடு செய்து மக்கள் சேவைக்காக நீதி, நேர்மை, பண்பு, அறிவாற்றல், அகிம்சை, அமைதி, சமாதானம், விவகாரங்களை தீர்மானம் செய்ய வேண்டிய சாமர்த்தியம் மற்றும் துணிவு பெற்றவர்களை வேட்பாளராக தேர்ந்தெடுத்து அரசாங்கம் அமைக்கலாம்.

இப்பொழுது இருக்கும் கட்சிகள் அனைவரும் இதன் படி ஏற்கனவே இருப்பதாக அபிப்ராயத்துடன் மக்களை திரும்பவும் கண் கட்டி வித்தை காட்ட முன்னணிக்கு வருவார்கள்.  மக்கள் இவர்கள் வலையில் அகப்படாமல், புதிதாக கட்சி ஆரம்பம் செய்வதில் புத்திசாலித்தனமாகும்.  புது தில்லி பாராளுமன்றம் அந்நியர்களுடன் உடந்தையாகி பொது மக்கள் கட்சி – உதாரணம் ஆப் (AAP) போன்ற கட்சியை தமிழ் நாட்டில் அறிமுகம் படுத்தினால் – மக்கள் அதை ஏற்றுக்கொள்வது அறியாமையாகும்.

எப்படி பழையதை அகற்றி விட்டு புதிதாக எதையும் கொண்டு வருவதற்கு முயற்சி தேவையோ, அதே போல் தமிழ் நாட்டில் இந்நாள் வரை ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கும் கட்சிகளை வேரோடு நீக்குவது மக்களக்கு சுதந்திரமாகும்.

ஆண்டவன் படைத்த உலகத்தில் எல்லா பிராணிகள், பொருட்களுக்கும் சேர்த்து முடிவு இருக்கின்றன.  அதே மாதிரி அரசியல் கட்சிகளுக்கும், ஆட்சியில் உள்ளவருக்கும் முடிவு காலம் இருப்பதை இவர்கள் மறுத்தாலும் அது நிச்சயம் நடந்துதான் தீரும்.  இவர்கள் முடிவை தாமதிக்கலாம் ஆனால் தடுக்க இயலாது.

தமிழ் நாட்டின் சரித்திரம் மாற வேண்டிய சமயம் வந்து விட்டதால், இதில் எந்த தடையும் போலி வேடத்தில் அதை தவறினால் சினிமா நடிகை நடிப்பில் வெற்றி காண முடியாது.

ஆண்டவன் விதித்த கட்டளையை மீறி எந்த நிமிடமும் மறைந்து போகும் மனித இனம் குறுக்கிட்டாள் அதன் வினையை அனுபவிக்க வேண்டி வரும்.

பூமி ஒன்று, மனித குலம் ஒன்றை எத்தனையோ பிரிவினை செய்கிற சமுதாயம் அரசியல் என்ற கூண்டில் சிக்கிக்கொண்டு தவிப்பது – அவர்கள் ஏற்றுக்கொண்ட தண்டனையாகும்.  ஏனனில் இதை கொடுப்பவர்கள் கோழைகள்.  அவர்களுக்கு மக்களிடம் பயம்.

தேர்தலில் அபகரித்த அதிகாரத்தை மக்கள் வருமான வரியில் நடத்துகிற போலீஸ் படை, நீதி மன்றம், மற்றும் பல வித நிறுவனத்தின் பின்னால் ஒழிந்து தன்னுடைய பாதுகாப்புக்காக மிரட்டுவது அவர்களின் பலவீனம்.  அதை மூடி மறைத்து மக்கள் அவர்களின் இரக்கத்திற்கு பயந்து வாழ வேண்டுமென்ற சூழ்நிலையை தந்திரமாக ஏற்படுத்தியுள்ளார்கள்.

நயவஞ்சகம், கள்ளம், கபடம் ஆகியவை மனிதர்களின் இருளாகும். இந்த இருட்டில் அச்சம் அதிகமாகி சிந்திக்கும் தன்மையை இழப்பதால் தீய செயலில் ஈடுபட்டு தன் பாவத்தை சேகரித்துக் கொள்கிறார்கள்.

இந்த பாதையில் செல்பவர்கள் மறப்பது – கர்ம வினைகள் யாரையும் விட்டு வைப்பதில்லை. அவரவர்கள் செய்யும் குற்றத்திற்கு அதன் பலனை தவிர்க்க சாத்தியம் இல்லை. இது சத்தியம்.

தமிழ் நாடு அரசியல் – சகல கட்சிகளின் அத்தியாயம் இறுதியான முடிவு தமிழகத்திற்கு புதிய பிறவியை உண்டாக்கும்.

அனைவருக்கும் அமைதி உருவாக!

நன்றி

பத்மினி அர்ஹந்த்

Comments

Got something to say?

You must be logged in to post a comment.