தமிழ் நாடு மற்றும் அகில இந்தியாவின் நலம்

October 28, 2022

தமிழ் நாடு மற்றும் அகில இந்தியாவின் நலம்

பத்மினி அர்ஹந்த்

இந்தியா மற்றும் தமிழ் நாட்டின் நலன் இந்த மூன்று செயல்களில் பெறலாம்.

முதலாவதுமது பானம் துறக்க வேண்டும். மது விற்பனை அரசாங்கத்திற்கு மிக பெரிய வருமானம்.

அதே சமயத்தில் இந்த மது குடி பழக்கம் ஏழை மற்றும் எளிய மக்களின் துன்பம் தாழ்த்தப் பட்ட நிலையின் பல காரணங்களில் முக்கியமானதாகும்.

அதனால் மதுவை இளைஞர்களும் தவிர்ப்பது நல்லது. மேற்கொண்டு அரசாங்கம் இந்த மதுவின் வருமானத்தை மக்களுக்கு தெளிவாக வெளிப்படுத்துவதில்லை.

அதோடு இந்த மது வருமானம் மற்றும் பொது மக்களின் வரியினால் வரும் மற்ற வருமானத்தை அரசாங்கம் அவரவர்கள் தன் சொந்த அயல் நாட்டு வங்கிகளில் சேர்த்து அந்த கல்ல பணத்தைக் குமித்து வைக்கிறார்கள்.

இந்த நிலமை ஏழை எளியவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தை பெரும் அளவில் பாதிக்கிறது. இந்த நிலயை நிராகரிப்பது நலனாகும்.

இரண்டாவதாக – திரையுலகம் இக்கால கட்டத்தில் அரசியல் மற்றும் அயல் நாட்டு அந்நியர்கள் விஷத்தைக் கக்கும் பிரச்சார கருவி.

இதனின் மூலம் சமுதாயத்தின் மத்தியில் வேண்டுமென்றே பிரிவுகள், பிளவு, பகை, வெறுப்பு, கசப்பு, காழ்ப்புணர்ச்சி, வன்முறை, குழப்பம் இப்படி பலவகை அனாவசிய வேறுபாடுகளை படம் என்ற பெயரில் உருவாக்கி, தீமையை எதிர்ப்பவர்களை தாக்கும் தீய சாதனமாக மாற்றி விட்டார்கள்.

அதனால் நல்ல பண்பாடு, நடை முறைகள், கலாச்சாரம் ஆகியவை அகற்றப் பட்டு, அதற்க்கு பதில் திரையுலகம் திரைப்படம் எடுக்கும் அவரவர் சுய நோக்கத்தையும், யார் மீது இவர்களுக்கு எதிர்ப்பு இருக்கிறதோ அவரை குறி வைத்து படமென்ற சாக்கில் தாக்குவது இவர்களின் முதல் குறிக்கோள் தவிற ஆசையாகும்.

திரைப்படம் கல்லம் கறுப்புப் பணத்தில் அதிக தொகையில் தயாரிப்பதால், அறம், நீதிநெறி இவர்கள் யாரை குறி வைத்து தாக்குகிறார்களோ அவர்களின் சுய உரிமை ஆகியவைகளை பொருட் படுத்துவ்வ்தில்லை.

இவர்களின் கொள்கையை ஆதரிக்காதவர்களை தன் விருப்பம் படி அவமதிப்பது இவர்களின் சுதந்திரமென்று இக்கால தவறான நடைமுறை ஆகிவிட்டது.

தமிழ் சினிமா குடி பழக்கத்தை தீவிரமாக பிரபல படுத்தி, அதன் எதிர் மறையான விளைவுகளை உதறி தள்ளி, தமிழ் நாட்டின் கோடி கணக்கான குடும்பங்கள் இந்த குடியைக் கெடுக்கும் குடியினால் சீரழிவதை கண்டு கொள்வதில்லை.

தமிழகத்தின் அரசியல் சினிமா துறையிலிருந்து
உருவானதால், இந்நாள் வரை தமிழ் திரையுலகம் அரசியலின் கட்டுப்பாட்டில் இருப்பது ஆச்சரிய தக்கதில்லை.

தமிழ் சினிமா அரசியலாகவும், அரசியல் சினிமாவை போலி பிரச்சார ஆயுதமாகவும் பயன் படுகிறது. மேலும் அரசியல் மற்றும் சினிமாவின் கல்ல கறுப்பு பணம் சலவைக்கு இரண்டுமே உபயோகமாகிறது.

இதில் பாதிக்கப் படுபவர்கள் சாதாரண பொது மக்களே. அவர்கள் தான் அவதியும் அல்லல்களுக்கும் ஆளாகிறார்கள்.

இதை பற்றி அரசாங்க்ம், அரசியல் கட்டுப்பாட்டில் செயல் படும் திரையுலகம் மற்றும் ஊடங்களுக்கு வருத்தம் அல்லது அக்கறை இல்லை.

பொழுது போக்கை கையாளுவது சகல உறுபின்னர்களையும் தன் கைவசப் படுத்தும் செயல்பாடு. அதனால் ஊடகங்கள், திரை படம் இவர்களுக்கு இவ்வகையில் மிகவும் உதவும் ஆயுதம்.

மக்களுக்கு நல்லது செய்ய வருபவர்களை ஊடகம், திரைப்படம் வழியே விமர்சனம் செய்து மான பங்கம் பண்றதில் மும்மரமாக இருப்பது மக்கள் மற்றபடி சமுதாயத்திற்குத்தான் சேதம்.           

ஆனால் நல்லவரை  எப்பொழுதும் பாதிப்பதில்லை.

இக்காரணத்தினால், இத்தகைய கதை, முரண்பாடான விதத்தில் சித்தரிக்கும் படங்களை முழுதும் புறக்கணிப்பது புத்திசாலி தனமாகும்.

மூன்றாவதாக – எந்த அரசியல் கட்சிக்கும் வாக்கை அதாவது தன் வோட்டை அல்லி வழங்கல் கூடாது. அப்படி செய்வதில் எந்த கட்சி ஆட்சி புரிகிறதோ, அவர்கள் மக்கள் வாக்கின் மூலம் பெற்ற அதிகாரத்தை சர்வாதிகாரமாக செயல் படுவதில் சிறிதும்  தயங்குவதில்லை.

ஆகையால் எதிர் கட்சி, ஆளும் கட்சி மற்றும் சுதந்திர கட்சி ஆகியோர்களுக்கு சட்ட சபையில் மற்றும் பாராளு மன்றத்தில் சரிசமமாக வாக்கை அளித்து யாரும் அராஜகம் பண்ண முடியாத படி ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்தி மக்கள், மாநிலம், அகில தேச நன்மை நலனிற்காக சேவை செய்யும் கட்டயாத்தை உருவாக்க மக்களுக்கு வாய்ப்பு வரும்.

இதை மூன்றும் இப்பவே செய்தால், தமிழ் நாடு மற்றும் ஒட்டு மொத்த இந்தியாவும் அரசியலை அராஜகத்திலிருந்து மீட்டி ஜன நாயக வழியில் செலுத்த வாய்ப்பு உள்ளது.

முக்கியமாக வாக்காளர்களின் வாக்கை பெரும்பாலான ஆளும் கட்சி அலட்சியம் செய்யும் தருணம் இயலாது.

இதில் சிறிதும் தயங்கி பயந்து கொண்டு இவ்வாறு செய்ய தவறினால், அராஜகம் குடியரசை விரைவில் அகற்றி தன் சுய ராஜ்யத்தை நிலைப்பார்கள்.

தமிழ் திராவிடமில்லை. அதே போல் திராவிடம் தமிழ் அல்ல. அப்படி தமிழ் திராவிடமாக இருந்தால், தமிழரை தவிற தெலுங்கு, மலயாளி, கன்னடம் மூன்றுமே தமிழ் நாட்டை இந்நாள் வரை ஆள மாட்டார்கள்.

அதற்க்கு எதிர் மாறாக உண்மையிலேயே திராவிடமான ஆந்திரா, தெலுங்கானா, கன்னடா மற்றும் கேரளா மாநிலங்களை எந்த தமிழரும் ஆளுவது மற்றுமில்லை, அங்குள்ள அரசியலில் தமிழர் அடியார்களோ அல்லது தொண்டர்களாக கூட இருப்பது சாத்தியமில்லை.

இன்னொரு பிம்பம் என்னவென்றால் – பெரியார் திணிப்பு. அது ஏன் தமிழர் தான் இழிச்ச வாய் ஏமாந்த சோணகிரி என்ற நிரந்திர பட்டத்தை சூட்டி, வெளியிலிருந்து வந்தவர்கள் பச்சை தமிழர்கள் என்ற பச்சை பொய்யை சொல்வதில் சிறிதும் தயக்கமில்லை.

அதே சமயத்தில் தமிழ் நாட்டில் பூர்விகம் கொண்டு கடைசி மூச்சு வரையில் (1975) தமிழ் நாட்டின் சிவகங்கையைச் சேர்ந்த திருப்பாச்சேத்தியில் நிலம் புலம், தோப்பு பண்ணை வைத்து தனியாக விவசாயியாக இருந்த பெண்மணியின் பேத்தி நான் வந்தேறியாம்?

பார்க்க போனால் கர்நாடகாவில் பிறந்த தெலுங்கரான பெரியாரை திராவிடமே ஆதி நாளிலிருந்து இந்நாள் வரை ஓரம் கட்டி தலை முழுகி விட்டு, கோட்ஸே சாவர்க்கர் கும்பலுக்கு கும்பிடு போட்டுக் கொண்டிருப்பது தான் உண்மை நிலவரம்.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் பெரியார் போலி கொள்கைகள் நேர் மாறான பெரியாரின் வாழ்க்கை பெரியாரின் பிம்பத்தையும், திராவிடம் மற்றும் பெரியார் கோஷம் போடும் பொய்யான நாடகம் அம்பலப் படுகிறது.

இப்படிக்கு,

பத்மினி அர்ஹந்த்

Comments

Got something to say?

You must be logged in to post a comment.