தமிழ் திரையுலகம் – பிம்பம் அம்பலம்

October 29, 2022

பிம்பம் அம்பலம்

பத்மினி அர்ஹந்த்

தமிழ் திரையுலகம் திரைக்கு பின்னால் உள்ள உண்மை குணம்.

பதினொன்று வயதினிலிருந்து என்பது வயது கதாநாயகிகளுடன் திரையில் டூயட்டும் திரைக்கு பின்னால் தனது சொந்த பொழுது போக்கு வாடிக்கைகளாக வைத்து தன் வாலிபத்தை முதிய வயதினில் நிலைத்திருக்கச் செயல் பட்ட மக்கள் திலகம் புரட்சி தலைவர் என்று திராவிட திரையுலகத்தினால் கொண்டாட படுகிற எம்.ஜி.ஆர் என்ற எம்.ஜி.ராமச்சந்திரனைப் பற்றி ஒரு உண்மை சம்பவம்.

எனது தாயின் தந்தையான என் தாத்தா நாராயண சுவாமி தேவர் தன் இளம் வயதில் திரை பட விநியோகம் சார்ந்த வேலையில் பனி புரிந்த பொழுது, அவர் அப்பொழுது சென்னையில் உள்ள வாகினி ஸ்டுடியோவில் எம்.ஜி.ஆர் படம் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. என் தாத்தா அங்கு சில பொறுப்புகளை சமாளிக்க வேண்டியதாக இருந்தது.

அந்த சமயத்தில் என் தாத்தாவின் தந்தையான திரு. வெள்ளைச்சாமி தேவர் (பாரிஸ்டர், Barrister)  விருதுநகரில் காலமானார். தன் மூத்த மகனை இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் (Cambridge University) பல்கலை கழகத்தில் மேல் படிப்பிற்காக அனுப்பிய பொழுது இரண்டாம் உலக போர் ஆரம்பித்து கப்பலில் பயணம் செய்த நேரம் தொற்று காய்ச்சல் பரவி அதில் அவர் கப்பலில் இறந்து விட்டார்.

அதற்க்கு பிறகு என் தாத்தா நாராயண சுவாமி தான் ஒரே மகனாகி விட்டார் அவர் குடும்பத்தில், அப்படி இருக்கையில் என் தாத்தாவின் தந்தை திரு. வெள்ளைச்சாமி தேவர் தவறிய பொழுது, என் தாத்தா நாராயண சுவாமி விருதுநகரிலிருந்து வந்த தந்தியை காண்பித்து தான் உடனே சென்னையிலிருந்து விருதுநகர் புறப்பட வேண்டுமென்று கூறிய பொழுது அதற்க்கு வாகினி ஸ்டுடியோவிலிருந்த அனைவரும் உடனே என் தாத்தாவை புறப்பட சொன்னார்கள் ஒருவரை தவிர.

அவர் வேறு யாருமில்லை எம்.ஜி.ஆர் தான்.

எம்.ஜி.ஆர் தடை விதித்தார். காரணத்தை தெரிந்து கொண்டும் என் தாத்தாவிற்கு அவசர விடுமுறை இயலாது என்ற எம்.ஜி.ஆர்., என் தாத்தாவை அப்படி அவர் கட்டளையை மீறி சென்றால், என் தாத்தாவை வேலையிலிறிந்து நீக்கப் படுவார் என்று கண்டிப்பாக கூறியதும்,

என் தாத்தா எம்ஜியாரிடம் அப்பொழுது தான் தான் தன் தந்தைக்கு கொல்லி வைக்க வேண்டும் அதோடு இறுதிச் சடங்குகளையும் நிறைவேற்றும் கடமை காத்திருக்கு என்று சொல்லியும் எம்.ஜி.ஆர். மறுத்திருக்கிறார்.

அதற்க்கு பிறகு, என் தாத்தா நாராயண சுவாமி தன் ராஜினாமாவை எம்.ஜி.ஆர் கையில் கொடுத்து விட்டு தனக்கு சினிமாவில் அந்த வேலையை விட, தன் நல்ல உயர்ந்த மனிதராக சீரும் சிறப்புமாக தன்மையுடன் நல்ல உதாரணமாக வாழ்ந்த தன் தந்தை திரு.வெள்ளைச்சாமி தேவருக்கு கடைசி மரியாதை செலுத்துவது முக்கியம் என்று சொல்லிவிட்டு திரையுலகத்துடன் விடை பெற்று கொண்டார்.

பிறகு எம்.ஜி.ஆர். மரணம் 1987 அடைந்த சமயம், என் தாத்தா உயிரோடுதான் இருந்தார்.

என் தாத்தா டெல்லியில் எங்கள் வீடு அதாவது அவர் மகளான என் தாய் வீட்டிற்கு வந்திருந்த பொழுது, நான் அவரிடம் அவர் இளவயது அனுபவத்தை பற்றி கேட்ட பொழுது, இச் சம்பவத்தை விவரமாக என்னிடம் தனிப் பட்ட முறையில் சொன்னார்.

அந்த சம்பவத்தை சொன்ன பிறகு என் தாத்தா என்னிடம் சொன்னது இது தான்.

என் தகப்பனுக்கு நான் கொல்லி வைப்பதற்கு ஒரு இரண்டு நாட்கள் லீவு அவகாசம் மறுத்த எம்.ஜி.ஆர்.

தன் உடலுக்கு கொல்லி வைக்க தன் வாரிசு இல்லாமல் போனது இப்பிறவியிலயே அனுபவிக்கும் கர்ம வினையின் விளைவாகும் என்ற உண்மையை என்னிடம் சொன்னார்.

என் தாத்தா வாகினி ஸ்டுடியோவில் வேலை புரிந்ததால், அந்த ஞாபகத்திற்கு தன் இளைய மகன் தினகரன் மூத்த மகளுக்கு அதாவது தன் பேத்திக்கு வாகினி என்ற பெயரை சூட்டினார்.

இதில் என்ன கற்று கொள்ள வேண்டுமென்றால் போலி உலகம் தனியாக அமைக்கப் பட்டு, அங்கிருந்து வரும் பொய், பித்தலாட்டம், கல்லம், கபடம், நயவஞ்சகம், பொய் கட்டமைப்பு, பிம்பம் ஆகியவை முத்தியிருக்கும் திரையுலகம், அரசியல் மற்றும் மதம், இனம் சார்ந்த பிரச்சாரம் நீடிப்பதில்லை.

எல்லாம் கர்ம வினையில் அடங்கி உள்ளது.

யாரும் எவருக்கும் கெடுதல், அலட்சியம், உதாசினம் செய்து தன் ஆங்காரம், ஆணவம், அகம்பவாத்தை பெருமை என்று தவறாக கருத்துபவருக்கு கர்ம வினை கடுமையான கசப்பான பாடத்தை கற்பித்தே தீரும்.

இதை யாரும் தவிர்க்க முடியாது.

இப்படிக்கு,

பத்மினி அர்ஹந்த்

Comments

Got something to say?

You must be logged in to post a comment.