Festival – தீபாவளி நல் வாழ்த்துக்கள். Happy Deepavali / Diwali

October 29, 2016

 

தீபாவளி நல் வாழ்த்துக்கள்

பத்மினி அர்ஹந்த்

 

வணக்கம் – நான் பத்மினி அர்ஹந்த், எழுத்தாளர், ஆசிரியை மற்றும் துணைவி தெய்வீக பணி

எல்லோருக்கும் எங்கள் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

இன்றைய சுப தினம் கஷ்டங்களை மறந்து, சந்தோஷத்தைக் கொடுக்கும் திரு நாள். தீமையை அழித்து நன்மையை உணர வைக்கும் சம்பவங்களையொற்றி கொண்டாடப்படும் உற்சவம் பாரதம் மற்றும் உலகத்தில் வசிக்கும் இந்திய குடிமக்கள் ஆவலோடு எதிர்ப்பார்க்கும் பண்டிகை தீபாவளி.

ஹிந்து மதத்தின் முக்கியாமான விழாக்களில், தீபாவளி உற்சாகத்தையும் அன்பையும் தருகிற சமூக நிகழ்ச்சி. புது ஆடை உடுத்தி, பலவகை பலகாரம், பட்ச்சனம்யென்று வித விதமான உணவு பரிமாறி குடும்பத்திலும், சமூதாயத்திலும் பகிர்ந்து கொண்டாடும் விழா. இல்லறம் மற்றும் நகரம் முழுதும் தீபங்கள் இருட்டை அகற்றி வெளிச்சத்தை வரவேற்கும் ஆனந்தமான காட்சி கண்களுக்கு விருந்தாகும். அதே பட்சத்தில் காதின் வலிமையை சோதிக்கும் பட்டாசுகள் அவரவர்களின் ஆனந்தத்தைத் தெரிவிக்கும் கோலாகலமாகிறது. தீபாவளி விழாவை தவறாமல் வருடா வருடம் தெய்வ பூஜையுடன் வழி படுவது அமோகமாகும்.

மனிதர்கள் மனம் தூய்மையாக இருந்தால், உண்மை, நேர்மை, இரக்கம், பாசம், நல்ல மனப்பான்மை, பண்பு இவை அனைத்தும் செயல்களில் தோன்றும். அந்த வாழ்க்கையில் ஒவ்வொரு தினமும் தீபாவளியாகும். இதை கடைபிடிப்பவர்கள் நித்திய நாட்களும் சுகத்தை அனுபவிக்கலாம்.

இன்றைய தீபாவளி விழா கொண்டாடும் மக்களுக்கு வாழ்க்கையில் சுகம், ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சி, முன்னேற்றம் பெற எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இப்படிக்கு.

பத்மினி அர்ஹந்த்
எழுத்தாளர், ஆசிரியை மற்றும் துணைவி தெய்வீக பணி

Comments

Got something to say?

You must be logged in to post a comment.