Lessons from Life – Tamil Video

April 30, 2023

வாழ்க்கை என்ற சிறந்த பள்ளி

பத்மினி அர்ஹந்த்

Transcript:

வாழ்க்கை என்ற சிறந்த பள்ளி

பத்மினி அர்ஹந்த்

யார் எந்த உபதேசம் கொடுத்தாலும் அது எத்தகைய ஆகினும், வாழ்க்கையின் கல்வியே அவரவர் நிலமையை துல்லியமாக எடுத்துக் காட்டும்.


வாழ்க்கை மூலம் ஒருவர்  கற்க தவறினால், அது எப்படி நாம் பிரயாணம் செய்யும்பொழுது நாம் எங்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்திற்கு போகும் சரியான வாகனம் அதாவது விமானம், ரயிலோ அல்லது பேருந்து வண்டியில் அமராவிட்டால் அது பிரயாணியை தான் செல்லும் இடத்திற்கு கொண்டுபோய் சேர்த்து விடுவது போல் ஆகும். அது எப்படியும் மாறலாம். ஆனால் தன் வாழ்க்கை வகுக்கும் நூறு சதவீதம்சரியான உண்டு இல்லையென்ற விடையோ வழி போல் இணை ஆகாது.

வாழ்க்கை ஒரு அருமையான ஆசி. அதிலும் எதுவும் எதிர் பாராத பார பட்சமின்றி உண்மையை தெளிவாகவிளக்கும் உன்னதமான கல்வி அருவி. எந்த நேரம் காலம் என்றில்லாமல் எத்தனை தடவை வேண்டுமானாலும் வாழ்க்கையின் அனுபவத்தை சிந்தித்து நிகழ் காலத்தையும் சரி எதிர் காலத்தையும் சீர் திருத்த எப்பொழுதும்வாய்ப்பு தரும் நிரந்திர பாட சாலை பல்கலை கழகமாகும். அவரவர் வாழ்க்கை கற்பிக்கும் பாடங்களில்முக்கியமாக யார் எப்படி பட்டவர்கள், எந்த வழி சிறந்தது எது நல்லது அல்லது எது நல்லதல்ல என்பதை அனுபவம் ரீதியாக உணர வைக்கும் அற்புதமே அவரவரின் வாழ்க்கை.

தன் சுய வாழ்க்கையிடமிருந்து கற்றுக் கொள்ளும் பாடம் அது நல்லதோ கெட்டதோ அதுவே வாழ்க்கையின் இருளை அகற்றும் வெள்ளிச்சமாகும். சிலர் பிறரை பார்த்து கற்றுக் கொள்வர். மற்ற சிலர் தன் செயல்களின் விளைவின் படி புரிந்து அதன் படி மறு அடி எடுத்து வைப்பர். தான் போகும் வழியில் கவனம் செலுத்துவர். செய்ததவறுகளை மீண்டும் செய்ய தயங்குவர். இது வாழ்க்கையின் தேர்வில் அவர்களின் வெற்றியாகும்.

அதே போல் வாழ்க்கை அனுபவம் என்ற புத்தகத்தை பிரட்டி அதே பிழையை செய்பவர்களுக்கு அதாவது மறுபடியும் திருந்தாதவர்களை அவர்கலின் வாழ்க்கை அவர்களை விழ்த்துவதிலும் சந்தேகமில்லை. இதுவாழ்க்கைத் தேர்வில் தவறை உணராதவர்களின் தோல்வியாகும்.

ஆகா மொத்தம் வாழ்க்கை கற்பிக்கும் மகத்தான பாடங்கள் இவைகளாகும்.

நம்பிக்கைபிறர் மேல் அதிக நம்பிக்கை வைத்து நம்பிக்கை துரோகம் பெறுவது இந்த கலியுகத்தின் பலபேரின் அனுபவமாகும்.

குறுக்கு பாதையை தவிர்த்து, பிறர் காலை வாரி விட்டு, பிறருக்கு தீங்கு விதைத்து தான் எதையும் அடையலாம் என்ற நோக்கத்தையும் நடை முறையும் பின் பற்றாமல், இதை விட்டால் பிறரை பயன்படுத்தி அவரைகளை துர் உபயோகப் படுத்தி தன் வாழ்க்கை சுகத்தை தேடாமல் செயல் படுவதற்கு பெயர் சாமர்த்தியமாகும்.

இதற்க்கெல்லாம் மாறாக தன் மேல் நம்பிக்கை வைத்து நேர்மை நாணயம் போன்ற நல் வழியை கடைபிடுத்து, யார் காலிலும் விழாமல், யார் வாசல்படியில் கையேந்தி நிற்காமல், பிறர் தயவில் தஞ்சம் அடையாமல், தன்மானம் சம்மானம் என்ற சுய கௌரவத்தைக் காப்பாற்றி, தன் கடுமையான உழைப்பு மற்றும் சுய அறிவினால் முன்னுக்கு வருவதை நன்னெறியாக வாழ்க்கை மனிதர்க்கு சமர்பிக்கிறது.

தன் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் வாழ்க்கை எப்படி இருக்குமென்றால் அது புயலில் அகப்பட்டு கடலில் அல்லாடும் படகை போல் அக்கறையுமில்லாமல் இக்கறையுமின்றி தத்தளிக்கும்.

அதை தவறினால் ஆன்மீக வழி இருக்கின்றதை ஏற்று, கடவுள் என்ற பரம் பொருளிடம் உண்மையான பக்தியுடன் அதுவும் இறை நம்பிக்கையோடு தனக்கு சரியான பாதயை காட்டி தனது வழிகாட்டியாக அருள்புரியும் படி கேட்டால், அதுவும் சாத்தியமாகும்.

அதை விட்டிட்டு போலி உலகத்தில் போலி வேடம் போடும் நபர்களை நம்பி தன் சீர் ஆகிற வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைப்பது சில பேரின் கொள்கையாகும்.

மேற் கொண்ட தகவல் யாவும் உதவி கேட்க்கும் நிலமையை குறித்தது.

அதே சமயம் பிறருக்கு உதவி செய்து நம்பிக்கை மோசம் போவதும் இக்கலியுகத்தில் சர்வ சாதாரணம். இத்தருணத்தில் வாழ்க்கை கூறும் வெளிப்படையான உண்மை என்னவென்றால் இதுவாகும்.

பாத்திரம் பார்த்து பிச்சை போடு. தானம், தர்மம் பிறருக்கு உதவி செய்யும் பொழுது அவர்கள் ஏமாற்றத்திற்கு இரை ஆகாதே என்பது தான் வாழ்க்கையின் எச்சரிக்கை.

ஒரு தடவையோ அல்லது மறு தடவையோ உதவி செய்பவர்களை ஏமாற்றுபவர்கள் திருந்தும் வகைறாக்கல் இல்லை. அதற்க்கு பதிலாக உதவி செய்பவரை உபயோகித்து அவர்களுக்கே ஆப்பையும் வைப்பவர்கள் ஆவர். அதனால் தான், வாழ்க்கை இவ்வாறு பேர்வழிகளிக்கு உதவுவது தன் பொருளாதாரத்தை மறுபடியும் வீண் ஆக்கும்  முட்டாள்தனமென்று அடித்துச் சுட்டிக் காட்டும்.

அப்படியும் வாழ்க்கை அனுபவத்தை மறந்து இப்படி பட்டவர்களுக்கு உதவுவது முல்லை மெண்மையான மலரென்று கருதி தன் பாதத்திற்க்கே சேதம் செய்யும் செயலாகும். அதோடு இத்தகைய வரலாறு துரோகத்திற்கு அவகாசம் கொடுப்பது அதே துரோகத்தின் பரிகாசத்திற்கு ஆளாவதாகும்.

அதே சமயம் பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவது போல் பிறருக்கு மோசம் நம்பிக்கை துரோகம் செய்பவர்களை அவர்களின் கர்மா அவர்களை கண்டிப்பாக துரத்தும் என்பதில் மாறு கருத்துமில்லை.

வினை விதைப்பவன் வினையை அறுப்பான் என்பதும் உறுதி.

இன்னொரு விஷயம் இதையொற்றி என்னவென்றால்அது தான் நன்றி.

நன்றி கடன் கர்மத்தின் மிக பெரிய பாகம். இதில் எவ்வகை குறை இருப்பினும், நாடகமே உலகமாக இருக்கும் உலகம் இதை எப்படி கருதினாலும், காலமும் கர்மமும் நன்றி இல்லாதவர்களை குற்றவாளியாகக் காண்பதுதான் இயற்கையின் நீதி, ரீதியாகும்.

நாய் ஒரு நன்றியுள்ள பிராணி. இதை பற்றி எவ்வித கருத்துக்கள் இருந்தாலும், பொதுவாகவே நாய் தன்னை வளர்க்கும் வீட்டாரை தனது உயிரை பனை வைத்து கூட காவல் காக்கும் என்பது எத்தனையோ சம்பங்களில் உறுதியாகியுள்ளது. கால பைரவரின் செல்ல பிராணியை நன்றிக்கு உதாரணமாக குறிப்பிடுவது இக்காரணத்திற்காகத்தான்.

நன்றி மனிதரை பொறுத்த வரைபெரும்பாலும் எத்தனை விலை என்பதே ஆகும். அதை விட நன்றிக்கு பதில் என்ன கைமாறாக தருவது என்றால் யாரோட உதவியானால் முக்கியமாக உதவி செய்பவரின் பொருளாதார நிலை இவர்களுக்கு உதவி செய்ததனால் குழைந்து சிதைந்து போன பட்சத்திலும் உதவி பெற்றுக்கொண்டவரோ அல்லது அவர்கள் மேல் போலி அக்கறை செலுத்துவரின் சப்பை கட்டு மிகவும் சுவாரசியமானது.

இவர்களின் தர்க்கம் என்னவென்றால்உன்னுடைய உதவியினால் இவர்களின் கஷ்டமோ கடுமையான நிலவரம் சரியானதில்லை. கஷ்ட பட்டவர் உயிரோ அல்லது பதவிக்காக போட்டியில் கலந்த பிறகு இவர்களின் வெற்றிக்கான சந்தர்ப்பம் சூன்யமாகயிருந்தும், மேலும் இவர்களின் மனைவி, பிள்ளைகள், உடன் பிறப்பு, உற்றார் உறவினர் நண்பர்கள் தெரிந்தவர் தெரியாதவர்கள் ஏன் உலகமே இவர்களை கை விட்ட பொழுது நீ தக்க சமயத்தில் உதவி செய்ததினால் இவர்களின் சங்கடம் தீர வில்லை. இவர்களோட முயற்சி கர்மா ஆகியவைதான் இதற்க்கு காரணம் என்று ஏளனம் செய்வது தான் மிச்சம்.

அப்படியென்றால் எதற்க்காக எந்த ஏமாந்த சோணகிரியை எத்தனை தூரமிருந்தும் தேடி அலைய வேண்டும்?

இவர்களின் நிகரற்ற திறமை மற்றும் தூய கர்மாவினாலும் தனது சரிந்து மடிந்து போன நிலயை சமாளித்து வெற்றி கொடி நட்டிருக்கலாமே? அப்ப ஏன் இவர்களுக்குள் இருந்த மகிமையை இவர்கள் மறந்து பிறரை சிரமத்திருக்கும் இவர்களின் செருக்கிற்கும் ஆளாக்க வேண்டும் என்பது இவர்களுக்கு ஞாபகம் வருவதில்லை.

இதில் தான் ஆறு அறிவுள்ளவரென்று பெருமை படும் மனிதனுக்கும் நன்றியுள்ள நாய் என்ற பிராணிக்கும் உள்ளபெரிய வித்தியாசம்.

இவ்விதமான நன்றி விஸ்வாசமற்ற விளக்கத்தின் பொழுது வாழ்க்கை கற்பிக்கும் பாடம்நன்றி இல்லாதவர்களிடம் உன் நேரத்தையும் கருணையையும் வீணாக்காதே.

இதற்குத்தான் பாத்திரம் பார்த்து பிச்சை போடு. அல்லி கொடுத்தாலும் அளந்து கொடு என்று வாழ்க்கை தலையில் அடித்து சொல்கிற அறிவுரையாகும்.

முக்கியமாக வாழ்க்கை கற்பிக்கும் பாடம்.

பிறரை ஏமாற்றுவது தன்னையே ஏமாற்றுவதாகும்.

அதே போல் வழியே போய் பிறருக்கு இடைஞ்சல் தருவது. 

அவர்கள் வழி மறுத்து அவர்களுடன் வீண் விவகாரம் வம்பு புரிவது.

அவர்களின் சுய வாழ்க்கையில் தலையிடுவது. 

அவர்கள் வீட்டில் புகுந்து தகாத வகையில் ஈடு படுவது.

அவர்களை வேண்டுமென்றே சீண்டுவது.

தூண்டி பார்ப்போம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று சோதனை செய்வது.

இவ்வாறு இம்சைக்கு என்ன மாதிரி உணர்ச்சி இருக்கிறது என்ற ஆவல் இவர்களே இவர்களின் இம்சைக்கு தீனியாவது ஒரு வினோதமான வேண்டா விவகாரம் என்பதையும் இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

இதற்க்கு நேர் முறையில் இம்சைக்கு குறியானவர் தன் உரிமையை பாதுகாத்து தொல்லை செய்யும் தீயவர்களுக்கு அதற்கான பதில் அளித்தால் அதை கோபம் சினம் கொண்டவர் என்ற பழியை சுமத்துவது.

அதுதவறினால் குறியானவரின் மௌனத்தையும், தீயவர்கள் கலாட்டா பண்ணும் அகராதி தனத்தை பொருட்படுத்தாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் பட்சத்தில் அதையும் கேலி கிண்டல் நையாண்டி செய்து அந்த செயல் பாட்டிற்கும் மழுமட்டை உதிர்த்த கட்டை என்ற பெயர் சூட்டி மகிழ்வது இவர்களின் பொழுது போக்காகி தன் நாசீசத்தை ஆயுதமாக்கி பல் வேறு தீமை கெடுதல் செய்வது.

இந்த தீயவைகள் யாவும் இவர்கள் தனக்கே தான் வைக்கிற உலையாகும்.   

கர்மம் காலத்தின் தண்டனையை நிராகரிக்கவோ தவிர்க்கவோ இயலாது.

ஏன்னென்றால் கால கர்ம சக்கரம் விதிக்கும் ஜென்ம மரணம் அல்லல் துன்பமென்ற வினையில் மாட்டிக்கொண்டு தன் ஆன்மாவிற்கு விமோச்சன ப்ராப்தமின்றி ஆவதுதான் நெடு காலம் நீடிக்கும் விதியாகும்.

ஆதலால் ஓவருவரின் வாழ்க்கை அவரவரிடம் கூறுவதுமனிதா உன் வாழ்க்கை பயணத்தில் கவனம் செலுத்து. பிறரை துன்புறுத்துவது மோசடி செயவதே உன் வாழ்க்கையாக வாழாதே.

இல்லா விட்டால் நீ போகும் இடம் உனக்கும் உன்னை சுற்றி இருப்பவர்களுக்கும் சாதகமாக இருக்காது என்பது தான் நிச்சயம்.

வாழ்க்கை பயணம் உரையாடல் தொடரும்.

இப்படிக்கு,

பத்மினி அர்ஹந்த்

எழுத்தாளர் தொகுப்பாளர்

PadminiArhant.com

Prakrithi.PadminuArhant.com

Comments

Got something to say?

You must be logged in to post a comment.